சென்னைவாசிகளின் உணர்வுகளை தன் ஓவியதால் ஒளிர வைத்த மெக்சிகன் கலைஞர் – வைரல் வீடியோ

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவ மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படியான ஓவியத்தை மெக்சிகன் கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார். தற்போது அந்த ஓவியம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் கலைத்…

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவ மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படியான ஓவியத்தை மெக்சிகன் கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார். தற்போது அந்த ஓவியம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொது இடங்களில் கலைத் திட்டங்களை உருவாக்கும் லாப நோக்கற்ற அமைப்பான Start India Foundation மூலம் சமூக அக்கறையுள்ள சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. அந்த வகையில், மெக்சிகன் கலாச்சாரம் பற்றிய பல்வேறு ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களை வண்ணமயமான பாணியில் வரையக்கூடிய மெக்சிகன் கலைஞரான பாவ்லா டெல்ஃபின், Start India Foundation அமைப்பின் உதவியுடன் சென்னை மெரினா கடற்கரையின் ஒரு முனையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான நொச்சிக்குப்பம் என்ற இடத்தில் மிகவும் பிரம்மாண்டமான ஒரே வண்ணமுடைய சுவரோவியத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஓவியங்கள் அடங்கிய வீடியோ தற்போது பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த சுவர் ஓவியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது தொடர்பாக கடந்த வியாழன் அன்று, Start India Foundation ஒரு கிளிப்பைப் பகிர்ந்துள்ளது. அதில் “பல ஆண்டு காலமாக நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள பல நிகழ்வுகளை பாவ்லா டெல்ஃபின் தனது ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். காலத்தின் அலைகளை எதிர்கொண்டு, அவர்களின் அன்றாடப் பணிகளில் பின்னடைவைக் கொண்டுள்ளனர். இந்த மரபுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாவோலா டெல்ஃபின் தனது பார்வையை ஒரே வண்ணமுடைய வண்ணங்களின் கலவையுடன் சுவர்களில் கொண்டு வந்திருக்கிறார். ஓவியத்தின் ஒவ்வொரு பக்கவாட்டிலும், அவருடைய கலை வடிவம் சிறப்பு பெற்றுள்ளதோடு, டெல்ஃபின் தனது சுவர் ஓவியம் வாயிலாக, அவர் உள்ளூர்வாசிகளுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பை காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ கிளிப் பகிரப்பட்டதில் இருந்து 19 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் இந்த ஓவியம் தொடர்பாக நெட்டிசன்கள் பாசிட்டிவான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, டெல்லியின் லோதி காலனியின் தெருக்களில் மலேசியாவைச் சேர்ந்த அந்த ராஸ் மற்றும் நகர்ப்புற ஓவியர் டாகு போன்ற கலைஞர்களுடன் இணைந்து டெல்ஃபின் சுவரோவியங்களை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.