மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும்: எம்.ஏ.சித்திக்

மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக்…

மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக் கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். மெட்ரோ ரயிலில் பயணித்தே அலுவலகத்திற்கு சென்று வந்து கொண்டிருந்ததாகக் கூறிய அவர், மெட்ரோ இரயில் பணிகளுக்காக மெரினாவில் அமைந்துள்ள காந்தி சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ ரயில் மியூசியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை மெட்ரோ ஏற்றுக் கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.