முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது முதல் தனியார் ரயில்

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து சீரடிக்கு இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது.

 

பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதற்காக போத்தனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து சீரடிக்கு இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. 5 நாள் பயணமாக சீரடிக்கு செல்லும் இந்த ரயிலில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பயணம் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ரயிலில் சேவை கட்டணமானது ரயில் கட்டணம், பேக்கேஜ் கட்டணம் என இரண்டு வகையாக உள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1,280 . ஆனால் தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரெயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது 4,999. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் ரெயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 அனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது.

 

இதில் பேக்கேஜ் கட்டணத்தில் கோவை முதல் சீரடி சென்று திரும்பும் ரெயில் கட்டணம், சீரடியில் சிறப்பு தரிசனம், 3 பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, சுற்றுலா வழிகாட்டி, பயண இன்சுரன்ஸ் போன்றவை அடங்கும். ஆனால் இதில் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயில் தரிசனம் போன்றவை அடங்காது. இந்த ரயில் கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர்ம் ஈரோடும் சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சீரடி பயணத்திற்காக மட்டும் அந்த தனியார் நிறுவனம் 38 லட்ச;ம ரூபாய் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய ரயில்வேயின் லோகோ பைலட் இந்த ரயிலை இயக்குகிறார். உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே தனியார் சேவை நிறுவனம் செய்துள்ளது. விமானங்களில் air hosters இருப்பது போலவே இந்த சிறப்பு ரயிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் மந்திராலயம் பகுதியில் மட்டும் 5 மணிநேரம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டி’ – தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

Web Editor

அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்: அதிர்ச்சியில் ஆழப்புழை, 144 தடை உத்தரவு

EZHILARASAN D

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போக்சோவில் கைது

Web Editor