கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை-2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது.…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை-2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டீனா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்போது அர்ஜெடீணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.

இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலக கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.