உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு 104 கட்டணமில்லா அழைப்பு மையத்தின் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு
இன்று தொடங்குகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து
வரப்படுகின்றனர். அந்த வகையில், இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் இருந்த மானவர்களை சந்தித்து பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த வகையில், வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து வந்தவர்களுக்கு இலவச மனநல மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நண்பகல் 12 மணிக்கு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார் உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து நியூஸ் 7 தமிழ் நேற்று முழுவதும் கள ஆய்வு நடத்தியது.
உளவியல் ஆலோசனை வேண்டும் என மாணவர்கள் விடுத்த கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில் 104 கட்டணமில்லா அழைப்பு
மையத்தின் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







