முக்கியச் செய்திகள் தமிழகம்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் மற்றும் நினைவிடங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தாக்கல் செய்த இந்த பதில் மனுவில் ‘அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011 அமலுக்கு வருவதற்கு முன்பே அமைக்கப்பட்டவை.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி அமைந்துள்ள இடம் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் 2க்குள்(CRZ-II) வருகிறது. CRZ-IIக்குள் நினைவிடங்கள் அமைப்பது ,CRZ விதிகளின்படி தடை செய்யப்படவில்லை.

08.08.2018ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அறிஞர் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தொடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

G SaravanaKumar

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்!

Saravana

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Halley Karthik