ஆப்பிளை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்! – நன்றி தெரிவித்த தமிழ் நடிகர்!

மிக முன்னணி சமூகதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்து தமிழ் நடிகர் டிவீட் செய்திருக்கிறார். உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலான் மஸ்க். சமூக…

மிக முன்னணி சமூகதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்து தமிழ் நடிகர் டிவீட் செய்திருக்கிறார்.

உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலான் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.  எலான் மஸ்க் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அவ்வப்போது, உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கிண்டல் செய்யும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவுகளை செய்வதை வழக்கமாக கொண்டவர்.

அதுபோலத் தான் ஓபன் ஏஐ பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வரும் புகார்கள் தொடர்பாக,  ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்து வெளியான மீம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  அந்தப் பதிவில், தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சி பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : “கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்.. வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்..” – செல்வப்பெருந்தகை பேச்சு!

இந்தப் பதிவால் மகிழ்ச்சி அடைந்த ‘தப்பாட்டம்’ திரைப்படத்தின் நடிகரும்- தயாரிப்பாளருமான துரை.சுதாகர்,  எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  ‘தப்பாட்டம்’ திரைப்படத்தின் காட்சி அடங்கிய மீம்ஸை பதிவிட்டிருப்பதற்கு அவர் நன்றி சொல்லியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.