முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நாளை 2 முக்கிய நிகழ்ச்சிகள்: ரஜினிகாந்த் திடீர் அறிக்கை

தனக்கு நாளை இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த விருது ரஜினிகாந்துக்கு நாளை வழங்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனக்கு நாளை இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது. இரண்டாவது என் மகள் சௌந்தர்யா விசாகன் அவர் சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய Hoote என்கிற app ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார்.

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் hoote app மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சிக்கான hoote app ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

Gayathri Venkatesan

தேர்தலுக்காக கொள்கைகளை மாற்றுபவர் முதல்வர் பழனிசாமி: கனிமொழி

Ezhilarasan

‘பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை அதிகரிக்க திட்டம்’

Arivazhagan CM