பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வரும் பட்சத்தில், வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுப்பதற்காக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின் றனர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்கிற காரணத்தால் பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகக் கூறினார்.
அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.