மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை!

புதுச்சேரியில் தடுப்பூசி, மருந்துகள் என எதற்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு, காலை 8 மணி முதலே,…

புதுச்சேரியில் தடுப்பூசி, மருந்துகள் என எதற்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு, காலை 8 மணி முதலே, மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியது சாதனை சரித்திரம் என்றும், உலகிலேயே தடுப்பூசி திட்டம் இந்தியாவில்தான் விரைவாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், தவளக்குப்பம் பகுதியில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் எனவும், மீதமுள்ள 9 சதவீதம் பேர் விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

https://twitter.com/DrTamilisaiGuv/status/1452536453884379136

மேலும், புதுச்சேரியில் தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள், படுக்கைகள் என எதற்கும் தட்டுபாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.