மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதல் வழங்கும் பணிகள் தொடங்கியது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருந்தகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கும் முகாம், மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜதிலகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் காளைகளின் வயது, உயரம், நிறம், கண்பார்வை திறன், திமில் மற்றும் கொம்பின் கூர்மை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டன. இதன்பின், காளையுடன் அதன் உரிமையாளர் நிற்கும் புகைப்படம் அடங்கிய முதல் தர சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழை காண்பித்தால் மட்டுமே காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிச்சீட்டு பெறமுடியும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளன்றும் இதேபோன்று பரிசோதனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.







