தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரி்ககை விடுத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள்…

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரி்ககை விடுத்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தடைந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா.
நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரர் பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின் போது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற விளையாட்டு வீராங்கனை,+2 மாணவி சிந்து, பாலாஜி ஆகியோரின் உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் விசாரித்தார்.

பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், ஆவடியில் புதிதாக தொடங்கப்படவுள்ள மத்திய அரசின் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய மத்திய அமைச்சர் கூறியதாவது:
ஆவடியில் அமைக்கப்படும் CGHS கட்டுமானப் பணிகள் டிசம்பர் 22-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும்,இந்த CGHS மூலம் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் CGHS இன் இணையதளம் மற்றும் செயலியை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

CGHS நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும். பிரதமர் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். நாடு முழுவதும் சுகாதார சேவையை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மத்திய அரசு விரைவில் ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டத்தை தொடங்கவுள்ளது. இதன் மூலம் ஒரு மாநிலத்தை சேர்ந்த டயாலிசிஸ் நோயாளி இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுகாதார நலத் துறை மையங்களில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

2600 கோடிக்கு மேல் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. இதில் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த 400 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

வரும் 1 ஆம் தேதி நொச்சிக்குப்பத்தில் காசநோய் இருப்பவர்களை கண்டறிவதற்கான Xray வசதியுடன் கூடிய 23 வாகனங்களை தமிழக முதலமைச்சர் துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிற இன்னுயிர் காப்போம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுமைக்கும் சென்று அடைய உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் தமிழ்நாடு அரசு கேட்கும் உதவிகளை அமைச்சர் செய்து தருகிறார். அவருக்கு நான் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கேட்கும் போதெல்லாம் எந்தவித தடையும் இன்றி தடுப்பூசிகளை மத்திய அமைச்சர் வழங்கி இருக்கிறார். 34.93 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 54.92 இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவ புதிதாக மருத்து கல்லூரி அமைக்க வேண்டும்.

கோவையிலும் AIMS மருத்துவ கல்லூரி அமைத்து தர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் இன்று கோரிக்கை வைத்துள்ளோம். நமது கோரிக்கை களை மத்திய அமைச்சர் நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.