ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் மற்றும் மாடல் ஜெர்ரி ஹால் ஆகியோர் விவாகரத்து பெறுகிறார்கள் என்று பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம் இத்தனைக்கும் சொந்தக்காரரானவர் ரூபர்ட் முர்டோக்.
இவருக்கு ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஆஸ்திரேலிய முர்டோக்கின் மதிப்பு 17 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவற்றின் தாய் நிறுவனங்களை உள்ளடக்கிய அவர் பங்குகளை வைத்திருக்கும் வணிகங்களின் உரிமை கட்டமைப்பை இந்த பிரிப்பு மாற்ற வாய்ப்பில்லை என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அவரது சக்திவாய்ந்த உலகளாவிய ஊடகப் பேரரசில் நியூயார்க் போஸ்ட், தி டைம்ஸ் ஆஃப் லண்டன் மற்றும் பிரிட்டிஷ் டேப்ளாய்ட் தி சன் ஆகியவையும் அடங்கும். ரூபர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிசியா புக்கர், ஒரு ஆஸ்திரேலிய விமானப் பணிப்பெண், அவரை 1960-ம் ஆண்டுக்கு பிறகு இவர் பிரம்மாண்டாக விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது.
பின்னர் 1999-ம் ஆண்டு மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன் அவரும் அவரது இரண்டாவது மனைவியும் ஒன்றாகதான் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னரே அவரையும் விவாகரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், நான்காவதாக மாடல் அழகியான ஜெர்ரி ஹால் என்பரை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் திருமணம் செய்து கொண்டார். சுமூகமாக சென்று கொண்டிருந்த இந்த வாழ்க்கைக்கும் ரூபர்ட் முர்டோக் முற்று புள்ளி வைத்துள்ளார். நான்காவதாக திருமணம் செய்த ஜெர்ரி ஹாலையும் அவர் விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் செய்யும் ஒவ்வொரு விவாகரத்தும் அதிக பணம் கொடுத்து பெறப்படுகின்றது என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








