திமுக மாநகர, மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவிப்பு இன்றோ, நாளையோ வெளியாகும் எனத் தெரிகிறது.
திமுகவின் உட்கட்சி தேர்தல் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம்த தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிளைக் கழக தேர்தல்கள் முடிந்து விட்டன. அவற்றில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு தேர்வு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் பேரூர், நகர செயலாளர்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு விட்டன. அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன. தற்போது மாநகர வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்றன. இது முடிந்ததும் ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநகரப் பகுதி செயலாளர்களுக்கும், மாநகர செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியாகும் எனத் தெரிகிறது. பேரூர், நகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் தேர்தல் முழுமை அடைந்ததும் அதன் அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்குப் பிறகு திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அனுப்ப வேண்டும். இதுதான் திமுகவின் தேர்தல் நடைமுறையாகும்.
இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக ஓய்வில் இருந்தார். அப்போது திமுக மாவட்டச்செயலாளர்களாக போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை எடுத்து முழுமையாக ஆய்வு செய்துள்ளார் எனத் தெரிகிறது. அதில் யாரெல்லாம் உண்மையாக உழைத்தார்களோ அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருக்கும்போது, கட்சியின் நிகழ்ச்சிகளை திறம்பட நடத்திய நிர்வாகிகளுக்கே மீண்டும் பதவி வழங்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலா. தேவா இக்னேசியஸ் சிரில்