முக்கியச் செய்திகள் தமிழகம்

மதிமுக போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது!

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக போட்டியிடும் தொகுதிகளை தற்போது வைகோ அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகின்றது. இந்நிலையில், அதிமுக, மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் தொகுதிகள் உடன்பாடு மற்றும், போட்டியிடக்கூடிய தொகுதிகளை உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, மதுராந்தகம் வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர் , மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவாகியுள்ளது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும், மதுராந்தகம் தொகுதிகள் தனி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது!

Advertisement:

Related posts

#HBDRajini – தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

Nandhakumar

காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி; உறவினர்கள் இடையே மோதல்!

Jayapriya

இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

Karthick