அதிமுக சார்பில் 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் அமைச்சர்கள் பலரும் அவர்களின் தொகுதிகளிலே போட்டியிடுகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் முதற்கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதற்கட்டமாக வெளியிடப்பட்ட ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில்,
எடப்பாடி – முதலமைச்சர் பழனிசாமி, போடிநாயக்கனூர் – துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், ராயபுரம் – ஜெயக்குமார், விழுப்புரம் – அமைச்சர் சி. வி. சண்முகம், ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன், நிலக்கோட்டை – எஸ். தேன்மொழி. ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில்,
திருமங்கலம் – ஆர் பி. உதயகுமார், ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜி, மதுரை மேற்கு – செல்லூர் ராஜூ, கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர், நன்னிலம் – காமராஜ், விராலிமலை – சி. விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், 57 மாவட்டச் செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்களில் தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கர், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.