டெல்லி மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக கவுன்சிலரான திருநங்கை

டெல்லி மாநகராட்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் கவுன்சிலராகியுள்ளார். ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபி கின்னார் என்கிற திருநங்கை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகியுள்ளார்.  டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ந்தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள்…

டெல்லி மாநகராட்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் கவுன்சிலராகியுள்ளார். ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபி கின்னார் என்கிற திருநங்கை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகியுள்ளார். 

டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ந்தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் வென்று டெல்லி மாநகராட்சியை பாஜகவிடமிருந்து ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

சுல்தான்புரி 43 ஏ வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபி கின்னார் என்கிற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வருணா தாக்காவைவிட 6,714 வாக்குகள் அதிகம் பெற்று டெல்லி மாமன்ற உறுப்பினராக பாபி கின்னார் ஆகியுள்ளார். டெல்லி மாநகராட்சி வரலாற்றில்  திருநங்கை ஒருவர் கவுன்சிலர் ஆவது இதுவே முதல் முறையாகும்.

38 வயதான பாபி கின்னார், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே கடந்த 2011ம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை தொடங்கியபோது அதில் இணைந்து பயணித்தார். தனது வெற்றிக்காக கடினமாக உழைத்தவர்களுக்கு இந்த வெற்றி அர்ப்பணிப்பதாக பாபி கின்னார் தெரிவித்தார். திருநங்கை என்பதால் சமூகத்தில் பல்வேறு அமதிப்புகளையும் சங்கடங்களையும் தாம் சந்தித்தாக கூறிய பாபி கின்னார், அதனை மன உறுதியோடு எதிர்த்து போராடியதாகவும் கூறினார். சமூக சேவைகளில் ஈடுபட்டு சுல்தான்புரி பகுதியில் பிரபலமான பாபி கின்னார் அப்பகுதியில் தொடக்க பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.