மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!

மயிலாடுதுறை காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார். தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுச்சேரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவப்புரம்…

மயிலாடுதுறை காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுச்சேரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவப்புரம் உள்ளது.கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் காவல்துறையின் சார்பில்  சிறுவர், சிறுமியருக்கான மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கலந்து கொண்டு திறந்து வைத்தார். இம்மன்றத்தில் சிறுவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் மன்ற திறப்பு விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும்,பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.