“புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்” – எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து!

தமிழ் புத்தாண்டையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்’ என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.