கோவை மாவட்டம், காரமடை அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலில்,
விவசாயம் செழிக்க மாவிளக்கு திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம், காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் அமைந்துள்ள
மாரியம்மன் கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில் ஆகும்.
திப்பு சுல்தான் ஆட்சி காலம் முதல் பொதுமக்கள் வழிபாடு நடத்தும் இந்த கோயில்
தொட்டிபாளையம், புங்கம்பாளையம், மொங்கம்பாளையம் மற்றும் பெள்ளாதி
என 8 கிராம மக்கள் தங்களின் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோயிலின் மாவிளக்குக்கு திருவிழா கடந்த ஒன்றாம் தேதி
பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து, கோயில் முன்பு கம்பம் நடப்பட்டு
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், இன்று அம்மனுக்கு எட்டு கிராம
மக்கள் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஊர் மக்கள் செழிப்புடன் வாழவும் மற்றும் விவசாயிம் செழிக்கவும், தங்கள் வீடுகளில்
விரதம் இருந்து மாவிளக்குகளை அம்மனுக்கு படைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மேளதாளம் முழங்க பெண்கள் தங்கள் தலையில் சுமந்து வந்த மாவிளக்குகளை,
கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு படைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
மேலும், ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
—-கு. பாலமுருகன்







