நாளை வெளியாகும் “மாவீரன்” திரைப்படம் – உதயநிதி விமர்சனம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார்.    சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார்.   

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாளை (ஜூலை 14-ம் தேதி) படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த ஜீலை 2-ம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

https://twitter.com/Udhaystalin/status/1679219283895947264

மாவீரன் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் மாவீரன் படம் ’சக்சஸ்’ என்பதை குறிக்கும் வகையில் தம்ஸ் அப் இமோஜிகளை பதிவு செய்து அதை சிவகார்த்திகேயனுக்கு டேக் செய்து உள்ளார். இந்த பதிவிற்கு பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.