மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய் உறவினரும் மற்றும் சினிமா தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ சினிமா தயாரிப்பு போக பல்வேறு…

மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் உறவினரும் மற்றும் சினிமா தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ சினிமா தயாரிப்பு போக பல்வேறு தொழில்நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவற்றில் சீன மொபைல் போன் நிறுவனமான ஷாவ்மியின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதிலும் அவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஷாவ்மி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களிலும், பெங்களூருவிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பிரிட்டோவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாவ்மி நிறுவனத்தில் வரி ஏய்ப்பில் சேவியர் பிரிட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.