முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

சமந்தா -நாக சைதன்யா பிரிவுக்கு அந்த நடிகர் காரணமா? கங்கனா கருத்தால் பரபரப்பு

நடிகை சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்கு அந்த பிரபல நடிகர்தான் காரணம் என நடிகை கங்கனா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஐதராபாத்தில் வசித்து வந்தார். பின்னர் தனது பெயருடன் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், தனது பெயரை வெறும் ‘S’ என்று சமூக வலைதளப் பக்கங்களில் மாற்றி னார் சமந்தா. இதனால், இருவருக்கும் பிரச்னை என்றும் விவாகரத்து செய்ய இருப்பதாக வும் செய்திகள் வெளியானது. இதை இருவரும் மறுத்து வந்தனர். சமீபத்தில் நடந்த நாகார் ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்கவில்லை. இந்தி நடிகர் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் அளித்த விருந்திலும் சமந்தா பங்கேற்க வில்லை. இந்நிலை யில் இருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் பிரியப்போவதாக நேற்று அறிவித்தனர். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாக சைதன்யா விவாகரத்து பெறுவதற்கு அந்த பிரபலமான இந்தி நடிகர் தான் காரணம் என்று, நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’அந்த தென்னிந்திய நடிகர், தனது மனைவியை திடீரென விவாகரத்து செய்திருக்கிறார். அதற்கு காரணம், விவாகரத்து எக்ஸ்பர்ட் எனப்படும் அவர் அந்த பாலிவுட் நடிகர்தான். அவரைச் சந்தித்த பின் அவர் வழி காட்டுதல்படி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். நான் யாரை சொல்கி றேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் நடிகர் அமீர்கானைத்தான் இப்படி குறிப்பிடுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர். நாக சைதன்யா, நடிகர் அமீர்கானுடன் லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

நாட்டில் 79% குறைந்த சில்லறை விற்பனை!

அரசுக்கு தேவையான ஆலோசனையை அதிமுக வழங்கும்: விஜயபாஸ்கர்!

Halley karthi

ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!

Jeba Arul Robinson