திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்! – நியூஸ் 7 தமிழ் பக்தியில் நேரலை!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை காலை தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நாளை காலை…

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா
கொடியேற்றத்துடன் நாளை காலை தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை
திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் மாசிதிருவிழா துவங்குகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 7-ம் திருநாளான மார்ச் 3-ந் தேதி காலை சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்திலும் 8-ம் திருநாள் அன்று
பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி சண்முகர் வீதி உலா வரும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 6-ந் தேதி காலை நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை கொடிப்பட்டம் ஊர்வலம்
நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும் மாவட்ட
நிர்வாகம் செய்துள்ளன. மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் நகரமே
திருவிழா கோலம் பூண்டுள்ளது.

மாசித்திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலையாக பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.