தனுஷுடன் ‘உறியடி’ படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் விஜய் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் வத்திப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50-வது படம் குறித்து அறிவித்திருக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கும் எனவும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்போதைக்குப் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனுஷ் தற்போது நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ‘உறியடி’ படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜய் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







