ஆனந்த் அம்பானியின் வாட்சை பார்த்து வியந்த மார்க் ஜுக்கர்பெர்க் மனைவி!

ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தை பார்த்து மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிஸிலா சான் வியப்படையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர்…

ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தை பார்த்து மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிஸிலா சான் வியப்படையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்த விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல பிரபலங்கள்  பங்கேற்றனர். பில்கேட்ஸ்,  மார்க் ஜுக்கர்பெர்க்,  ரியானா,  இவாங்கா டிரம்ப்,  கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சச்சின் டெண்டுல்கர்,  தீபிகா படுகோன்,  ரன்வீர் சிங்,  ஷாருக்கான்,  எம்.எஸ். தோனி,  சானியா நெவால்,  அட்லீ,  ரஜினிகாந்த் என இந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.  தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த திருமண விழாவின் கொண்டாட்டங்களே அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இந்த கொண்டாட்டங்களின் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  அதில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவி பிரிஸிலா சான் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தை பார்த்து வியக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  இந்த கைக்கடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் 63 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.