$206.2 பில்லியனாக அதிகரித்த சொத்து மதிப்பு | உலகின் 2வது பணக்காரானார் #MarkZuckerberg!

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின்…

Mark Zuckerberg, 2nd richest man ,world, Jeff Bezos

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டின்படி, ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு முதல் நாளில் இருந்து 57.5% அதிகரித்து, 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

இதையும் படியுங்கள் : மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என 5 மொழிகளுக்கு ‘செம்மொழி அந்தஸ்த்து’ வழங்க #UnionCabinet ஒப்புதல்!

இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அவரை உலகின் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி மார்க் ஜூக்கர்பெர்க் அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 70 சதவீத சொத்துக்கள் உயர்ந்துள்ளது. அவரது மெட்டா நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் 560 அமெரிக்க டாலர்கள் வரை எட்டியது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 272 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.