“எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது தான் வாசித்தேன் என்றும் அனைவரும் இந்த சிறுகதையை வாசிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘வாழை’…

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது தான் வாசித்தேன் என்றும் அனைவரும் இந்த சிறுகதையை வாசிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் – 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் “நீர்ப்பழி” எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக சோ.தர்மனை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு வாழை திரைப்படத்தை பார்க்குமாறு கூறியதாகவும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சோ. தர்மன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : 7.5% இடஒதுக்கீட்டில் #MBBS கனவை நனவாக்கிய கூலித் தொழிலாளியின் மகன்!

இந்நிலையில் மாரி செல்வராஜ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது ;

“வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன்  வாழையடி என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இதோ அந்த வாழையடி சிறுகதை. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். எழுத்தாளர் சோ. தர்மனுக்கு நன்றி”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.