34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

நாளை வெளியாகும் ‘மார்க் ஆண்டனி’  படத்தின் டிரெய்லர் -புதிய அப்டேட்!

‘மார்க் ஆண்டனி’  படத்தின் டிரைலர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஷால்  ‘லத்தி’  படத்தைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் Pan Indian  திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அத்துடன் படத்தின் டீஸரை, நடிகர் விஜயிடம் காண்பிக்க விரும்பிய மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படக் குழுவினர், அதற்காக அவரிடம் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டுள்ளனர். நடிகர் விஜய்யும் மறுப்பேதும் தெரிவிக்காமல், உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து நடிகர் விஷால் உட்பட படக்குழுவினர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள்.

பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீஸரை நடிகர் விஜய்யிடம் படக்குழு போட்டு காண்பிக்க, அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய், படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) மார்க் ஆண்டனி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram