தமிழ்நாட்டில் பெய்த கனமழை; அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து…

தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 8 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதேபோல் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 562 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 5,018 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 8,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.