மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்ததினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டிற்கு சேவை செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து புகழஞ்சலியை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.