பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் பாஜக கிளைகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல் ஒவ்வொரு
மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக
நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று 88-வது நிகழ்ச்சியாக வானொலி மூலம் உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் நெடுங்குன்றம், பாலையா கார்டன் பகுதியில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு பிரதமரின் உரையை நேரடியாகக் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள மனதின் குரல் நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2373 பாஜக கிளைகளிலும் பொதுமக்கள் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 67,000 கிளைகளிலும் பிரதமரின் உரையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒருநாள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் சென்று நிகழ்ச்சி குறித்து எடுத்துக்கூற வேண்டும் என வலியுறுத்தினார்.








