‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு நிதி மோசடி செய்ததாக விசாரணை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து…

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு நிதி மோசடி செய்ததாக விசாரணை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.  இந்த திரைப்படம் வெளியாகி 3 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில்,  இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் 7 கோடி பணம் பெற்று,  லாபத்தில் 40% பணம் தருவதாக கூறி விட்டு தராமல் மோசடி செய்துள்ளதாக அரூரைச் சேர்ந்த ஹமீது என்பவர் புகார் அளித்துள்ளார்.

ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி,  சவுபின் ஷாகிர்,  பாபு ஷாகிர் ஆகியோரின் முன் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர்,  ஷான் ஆண்டனி,  பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : Paytm நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் கவுதம் அதானி?

படப்பிடிப்பு துவங்கும் முன்பே,  படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக ஹமீதுவிடம் பணம் பெற்று, ரூ.18.65 கோடி செலவான நிலையில் ரூ.22 கோடி செலவானதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  மேலும்,  பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.