‘AK61’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அஜித்குமார் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 11 முதல் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் அஜித்குமார் பெயரை தவிர மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மஞ்சு வாரியர், தற்போது, நடிகர் அஜித்குமாரின் ‘AK61’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அண்மையில், நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் வைரலானது. அதில், அவர் உடல் தோற்றத்தில் – எடையில் மாற்றம், தலைமுடி மற்றும் தாடி உள்ளிட்ட பல மாற்றங்களுடன் அவர் இருந்தார். இந்நிலையில், ‘AK61’ படத்திற்கு பிறகு இயக்குநர், விக்னேஷ் சிவனுடன் நடிகர் அஜித்குமார்ப் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








