மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சிகள் அமளி, இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்தும் அங்கு…

மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்தும் அங்கு நடைபெற்று வரும் கலவரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இதுதொடர்பாக விவாதிக்க கோரியும், அவையில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. திமுக சார்பில் மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நோட்டீஸ் அளித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பின. இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது . இதனையடுத்து அவை நண்பகல்  முதலில் 12 மணி வரையும் பின்னர்  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் இதே பிரச்னையை கிளப்பியதால் முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையும்  அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.