வட சென்னையில் அயோத்தி தாசப் பண்டிதருக்கு மணிமண்டபம்: முதலமைச்சர்

வடசென்னை பகுதியில் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம், வ.உ.சி. பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை…

வடசென்னை பகுதியில் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம், வ.உ.சி. பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடன் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழன் அரசியல் செய்ய முடியாது எனவும், தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்தி தாசர் பண்டிதர் என புகழாரம் சூட்டினார்.

திருக்குறளுக்காக அயோத்தி தாசர் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும் எனவும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமும் தடையாக உள்ளது என முழங்கியவர் அயோத்தி தாசர் பண்டிதர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், அயோத்தி தாசப் பண்டிதரின் 175வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.