தனக்கு எதிராக உண்மை பேசுபவர்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மை பேசுபவர்களை பாஜக அரசு குறிவைப்பதாகக் குறிப்பிட்டார். எளிய மக்களாக இருந்தாலும், அவர்கள் துன்புறுத்தப்படுவதாக அவர் விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசின் இந்த செயல்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளில் எளிய மக்களும் தொழில்துறையினரும் லட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
தனக்கு என்ன தேவையோ அதை அடைய பாஜக எதையும் செய்கிறது என குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, இதற்காகவே, உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
சிவ சேனா மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, நிதி மோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்வாத், குஜராத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசை குற்றம் சாட்டி மம்தா பானர்ஜி பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.