“மாமே… Ready For the Blast?” – இன்னைக்கு சம்பவம் இருக்கு… ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் அப்டேட் கொடுத்த படக்குழு!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள  திரைப்படம்  ‘குட் பேட் அக்லி’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில்  பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

https://x.com/MythriOfficial/status/1908032976002363836

தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி டிரெண்டானது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.