முக்கியச் செய்திகள் தமிழகம்

வடபழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு; “இது வெறும் ட்ரெய்லர்தான்”!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்ட ஆய்வில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான 5.5 நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அதனை மீட்கும் பணியினை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அதனை மீட்டுள்ளார்.

மேலும் இந்த இடத்திற்கான பயன்பாட்டிற்கு எவ்வித தொகையும் அறநிலையத்துறைக்கு வழங்கப்படவில்லையென்றும், தமிழ்நாட்டின் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று 1 மாதம் ஆகிறது. இது வெறும் டிரெய்லர்தான் மெயின் பிச்சர் விரைவில் காண்பிக்கப்படும். என்றும் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோயில் நிலங்களில் உள்ள இடங்களில் வருமானம் அறநிலையத்துறைக்கு வருவது உறுதி செய்யப்படும் என்றும், பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் இருப்பவர்களை வாடகை தாரர்களாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இடம் சமூகம் சார்ந்த விஷயத்திற்கு பயன்படுத்த முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இந்த இடம் மாற்றப்படும். எந்தெந்த கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவில்லையே அந்த கோயில்கள் கண்டறியப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து சாதியினரும் அர்சகராகலாம் என்கிற முடிவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இது குறித்து முதலமைச்சர் நல்ல பதிலை அளிப்பார் என்று அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“விரைவில் தொடங்கவிருக்கும் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி!

Saravana Kumar

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

Ezhilarasan

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

Nandhakumar