சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுடா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற அமெரிக்கா வீரரான லூகாஸ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக இரட்டை சதம் விளாசிய இலங்கை அணி வீரர்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார் தினேஷ் சந்திமால்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை அணி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைச் சமன் செய்தது இலங்கை அணி. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இதன் மூலம் 1-1 என்ற புள்ளி கணக்கில் இலங்கை அணி தொடரைச் சமன் செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாளை முதல் விளையாட உள்ள இந்திய அணி:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நாளை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியைச் சந்திக்க உள்ளது.
யூரோ கால்பந்து;டென்மார்க் அணியை வீழ்த்தியது ஜெர்மனி அணி:
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் யூரோ மகளிர் கால்பந்து லீக் தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தியது ஜெர்மனி. Group B பிரிவில் ஜெர்மனி – டென்மார்க் அணிகள் போட்டியிட்டது அடுத்து ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 4 கோல்கள் அடித்து, டென்மார்க்கை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
அண்மைச் செய்தி: ‘திரெளபதி முர்வுக்கு 16 சிவ சேனா எம்பிக்கள் ஆதரவு’
பதக்கங்களை வென்று குவிக்கும் 94 வயது வீராங்கனை:
பின்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 94 வயது நிறைந்த வீராங்கனை பாக்வானி தேவி 100 மீட்டர் தூரத்தை 24.74 நொடிகளில் கடந்து ஒரு தங்கம் வென்றுள்ளார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார் பாக்வானி தேவி.
இந்தியாவுக்குத் துப்பாக்கி சுடுதலில் தங்கம்:
சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுடா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்கா வீரரான லூகாஸ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் அர்ஜுன் பபுடா.







