தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு பகுதியில், கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், தேர்வுக்…

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு பகுதியில், கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஏராளமான மாணவ , மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, கோஷங்களாக எழுப்பினர்.

–கோ. சிவசங்கரன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.