பொன்னேரி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு மின்சார ரயில் தடம் புரண்டது;
உடனடியாக செயல்பட்டு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்ததை தொடர்ந்து ரயில்கள் வழக்கம் போல் இயங்கின.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே சென்னை சென்ட்ரல்
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும்
பராமரிப்பு ரயில் சென்னை பணிமனையில் இருந்து பொன்னேரி ரயில் நிலையம் அருகே செல்லும் போது அதன் சக்கரம் கீழே இறங்கியதில் தண்டவாளம் சேதமானது.
தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்த பராமரிப்பு ரயில் சக்கரத்தை மேலே தூக்கி தண்டவாளத்தை சரி செய்தனர். அதன் பின்னர் மீண்டும் அவ்வழியாக மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் சேவை ஒருமணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இணைப்பு லூப்லைனில் பராமரிப்பு ரயில் தடம் புரண்டால் பெரிய அளவில் ரயில் சேவையில் பாதிப்புகள் ஏற்படவில்லை தடம் புரண்ட பகுதியில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.







