நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவடைந்தது.
நாடாளுமன்றத்தில் இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை கூட்டத்தொடர் தொடங்கியது முதலே லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் நாடாளுமன்றத்தில் கூச்சலையும், அமளியையும் ஏற்படுத்தியதோடு, தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே இருந்து வந்தது. இதில் குறிப்பாக அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு,
மனித சங்கிலி போராட்டம் என பல எதிர்ப்புகளை காட்டியதோடு, தங்கள் கருத்துக்களையும் ஊடகங்களில் மிக தெளிவாகவே பகிர்ந்தும் வருகின்றனர்.
அதில் குறிப்பாக, திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹுவா மொய்த்ரா-வின் பேச்சுக்கள் ஊடகங்களால் அதிகம் கவனம் பெற்ற ஒன்று. அதிலும் அதானி விவகாரத்தில் இவரது நாடாளுமன்ற உரைகள் இன்றும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் விடியோவாக இருக்கிறது. இந்நிலையில் இவர், ஒருவர் எப்பேர்ப்பட்ட உயரத்திலும், நிலையிலும் இருந்தாலும் தன் அன்னைக்கு தான் ஒரு குழந்தைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், மஹுவா மொய்த்ராவின் அம்மா பாடகி Doris Day-வின் பிரபலமான பாடலான Que Sera Sera பாடலை பியானோவில் வாசிக்கிறார். இந்த விடியோவை பகிர்ந்து மஹுவா மொய்த்ரா ”எனது அன்பிற்குரிய திறமையான அம்மா இந்த பழைய ஃபேவரைட் பியானோ வாசித்த வீடியோவைப் பார்த்து எழுந்தேன். அனைவருக்கும் இனிய ஞாயிறு!” என அவர் எழுதி இருந்தார். இந்த வீடியோ பகிரப்பட்ட சிலமணி நேரங்களிலேயே 74,500 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, அதிகம் பகிரவும் பட்டு வருகிறது.
https://twitter.com/MahuaMoitra/status/1637295759728017409?s=20








