அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!

அமலாக்கத்துறையின் மூன்றாவது சம்மனையும்  திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார்.   திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா.  நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக…

அமலாக்கத்துறையின் மூன்றாவது சம்மனையும்  திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார்.  

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா.  நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க,  தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  நடந்த விசாரணைக்குப் பிறகு மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  அத்துடன் அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக மொய்த்ரா மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.  அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் விசாரிக்க அமலாக்கத்துறை இவருக்கு அனுப்பிய 2 சம்மன்களையும் இவர் நிராகரித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட மஹுவா மொய்த்ராவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.  இதனைத் தொடர்ந்து,  அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக நேற்று சம்மன் அனுப்பியது.  அதில் அவர் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் அவர் இந்த சம்மனையும் புறக்கணித்தார்.  கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரசாரம் செய்யப்போவதாகக் கூறி,  சம்மனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.