முக்கியச் செய்திகள் இந்தியா

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி!

மும்பை அருகே, மலாட் வெஸ்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம், இடிந்து விழுந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் மும்பை அருகேயுள்ள மலாட் வெஸ்ட் என்னும் பகுதியில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது, இதனால் விபத்து ஏற்பட்ட பகுதியில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

“திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்” – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Saravana Kumar

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்..

Saravana Kumar

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar