மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







