சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் திடீர் தரையிறக்கம்!

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இஞ்சினில் கோளாறு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தரையிறங்கியதால் 172 பயணிகள் உயிர்தப்பினர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 5 மணி 18 நிமிடங்களுக்கு 172…

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இஞ்சினில் கோளாறு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தரையிறங்கியதால் 172 பயணிகள் உயிர்தப்பினர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 5 மணி 18 நிமிடங்களுக்கு 172 பயணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று துபாய் புறப்பட்டது. ஒரு மணிநேரம் வானில் பறந்த நிலையில், விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதானது விமானிகளுக்கு தெரியவந்தது.

சற்றும் தாமதிக்காத விமானிகள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினர். புறப்பட்ட ஒரு மணி நேரத்தில், மாலை 6 மணி 17 நிமிடங்களுக்கு விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், விமானத்தில் பயணம் செய்த 179 பேர் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.