மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில், புனே செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் அங்கிருந்த ரயில்வே நடைமேம்பாலம் வழியாக நடந்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ரயில்வே நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் நடந்து சென்ற சிலர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து காயம் அடைந்தனர். காயம் அடைந்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெண் ஒருவர் பலியானார்.
உயிரிழந்த பெண் நிலிமா ரங்காரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் படுகாயமடைந்த ரஞ்சனா கட்டாத் என்பவரும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைமேம்பாலத்தின் பிளாட்பாரத்தில் 2 சிலாப் உடைந்து விழுந்துள்ளது. ஆனால் அந்த பலத்தின் மற்ற பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது என கூறப்பட்டுள்ளது.