முக்கியச் செய்திகள் சினிமா

விரைவில் வெளியாகவுள்ள “சீயான் 60”

தமிழ் சினிமாவில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “சீயான் 60” படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் 50% முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்,விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ஆக்சன் திரில்லர் படம் “சீயான் 60”. விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படம் அவருடைய 60-வது திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் விக்ரம், மகன் துருவ் விக்ரமுடன் சேர்ந்து நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு அம்சமாக விக்ரமின் அடையாளப்பெயரான
“சீயான்” என்ற பெயரையே படத்தின் பெயராக வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் “சீயான் 60” படத்தை பற்றி கூறுகையில், படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் 50% முடிந்துவிட்டதாகவும், வாணி போஜன் மற்றும் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், படப்பிடிப்பு இந்த கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

Seven Screen Studio தயாரிப்பில் உருவாகும் “சீயான் 60” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Advertisement:

Related posts

கொடைக்கானலில் தொடர் கனமழை!

Ezhilarasan

மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Jayapriya

ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!

Ezhilarasan