மதுரையில் விமான டிக்கெட் முன்பதிவுக்கு தக்காளி இலவசம் – டிராவல் ஏஜென்சி அறிவிப்பு!

மதுரையில் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு கிலோ தக்காளியும், வெளிநாட்டு விமான முன்பதிவுக்கு  1.5 கிலோ தக்காளியும் வழங்கப்படும் என்று டிராவல் ஏஜென்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைவால் விலைவாசி தினம்தோறும்…

மதுரையில் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு கிலோ தக்காளியும், வெளிநாட்டு விமான முன்பதிவுக்கு  1.5 கிலோ தக்காளியும் வழங்கப்படும் என்று டிராவல் ஏஜென்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைவால் விலைவாசி தினம்தோறும் உயர்ந்து
கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில்
தக்காளிகளை குறைந்த விலையில் விநியோகம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகம் செய்யும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தக்காளி விலைவாசியை வியாபாரமாக மாற்றும் விதமாக மதுரையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இங்கே விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தக்காளி இலவசம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உள்நாட்டு விமான முன்பதிவுக்கு ஒரு கிலோ தக்காளி என்றும் வெளிநாட்டு விமான முன்பதிவுக்கு 1.5 கிலோ தக்காளி இலவசம்” என அறிவித்துள்ளது. இதற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாகவும் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

மேலும் தக்காளி விலைவாசியை வியாபாரமாக மாற்றும் விதமாக மதுரையில்  டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று விமான முன்பதிவுக்கு தக்காளி இலவசமாக அறிவித்திருப்பது மக்களிடையே பேசு பொருளாகி வருகிறது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.